
உன் கழுத்தில்
கட்டெறும்பு
ஊர்ந்து செல்கிறது
நீ எனக்கு அன்னையாக
இருக்கலாம்
ஆனால்
நீ மகனாக நினைப்பாயா ?
என்பது சந்தேகம்
நீ எனக்குச் சகோதரியாக
இருக்கலாம்
உடனே அவ்வுறவை
உன்னிடம் எதிர்பார்பது
மிக அதிகம்
நீ எனக்குக் காதலியாகக்
கூட இருக்கலாம்
ஆனால்
நீ கனவு கண்ட
மன்மதன்
நானாக இருக்க வாய்ப்பில்லை
யோசித்துக் கொண்டிருக்கையில்
கடித்துவிட்டது
கலாச்சாரம்.