சொற்களை மட்டும்
கூட்டிக் கொண்டே
போகிறவர்கள்
சொன்னவனை
கழித்துவிட்ட பிறகு
அதன் அர்த்தங்கள்
அனாதையாவதில்
விந்தையில்லை
உடலைக் கழற்றி
வைத்துவிட்டு
கேள்விக்கு
விடை சொன்னவன்
நேற்றோடு செத்துவிட்டான்
சொற்கள் வைத்த
கொள்ளியில்
சொர்க்க ரதம் ஏறிவிட்டான்
இனி அவன்
உங்கள் முன்
ஒரு தபால்காரனாய்த்
தோன்றுவான்
கடிதங்கள் சிரித்தாலென்ன
அழுதால் என்ன?