ஞாயிறு, 3 டிசம்பர், 2017

பசி

ஏகாந்த இரவில் கொடும்பசி
வெந்திருந்தால் தின்றிருப்பேன்
பௌர்ணமி தோசை

3 கருத்துகள்:

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

பசித்தமக்கள் சிறிதுகூழ் தேடுங்காள் பானை ஆறக் கணத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின்நிலவை உனைக்காணும் இன்பம் தானோ? என்றார் பாரதிதாசன் புரட்சிக் கவியில்! எங்கள் நீலமேகனுக்கோ தோசையாகத்தெரிகிறது.தோசை மிகப்பிடித்த உணவு போலும்!தோசையம்மா தோசை அதும் இயற்கை அம்மா சுட்ட தோசையாயிற்றே!நிலவின் குளிர்மையைப்பாரதிதாசன் "பானை ஆற"என்றான்.நீலமேகனோ வேகவில்லை என்கிறார்!பசியின் கொடுமைதான் போலும் வேவதற்க்குள் உண்ண நினைத்தால் எப்படி?பசிக்காரன் உணவாகப் பார்க்கிறான்.காசிஆனந்தன் நிலவைப்புண் என்கிறான் கவியின் உள்ளத்திற்கேற்ப காட்சி மாறுகிறது.அரிய கவிதை!வாழ்த்துக்கள்!

paalveli-athirvugal சொன்னது…

நிலவென்னும் தோசை சற்று(ம்) வேகாமல் "உண்கண்" மூலம் உண்பதே சுவையதிகம் கவிஞரே. அப்படியும் உங்கள் சிந்தனையை படர விடுங்கள். கவிதை அழுகு

ச. நீலமேகன் சொன்னது…

சுவைத்தமைக்கு நன்றி
அன்புடன்
தங்கள் தம்பி.