மாதிரி வினாத்தாள்
புதன், 22 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018
திங்கள், 7 மே, 2018
வேர்களைப் பிடுங்காமல் ?
விரல்கள்
காயப்படுத்தும்போதெல்லாம்
அதன் நகங்கள் மட்டுமே
நறுக்கிவிடப்படுகின்றன
அதன் வேர்களைப் பிடுங்காமல்
வெட்டப்படும் நகங்களால்
ஆசிபாக்களின் அலரல்
ஓயப்போவதில்லை
சிதைக்கப்பட்டவளின் வலி
தெரியாமல்
நகம் வெட்டிக்கொண்டிருந்த
கடவுளை
என்செய்வீர்கள்?
அதன் கரசேவகர்களை
என்செய்வீர்கள்?
ஞாயிறு, 6 மே, 2018
நீட்
நீட்
விதிகள் வகுக்கப்படுவதே
மனிதன் வாழ்வதற்காகத்தான்...
வீழ்வதற்காக ஒரு விதி
வகுக்கப்படுமானால்
அது விதியல்ல
வீணர்கள் செய்யும் சதி
விடை சொல்லிவிடக்கூடாது
என்பதற்காகவே
கேட்கப்படும்
வினாக்களால் என்ன லாபம்?
இந்த தேசத்தில்
வித்தையைக் கற்றுத்தராமலேயே?
ஆண்டுக்கொருதரம்
அரங்கேற்றம் மட்டுமே
நடந்தப்படுகிறது.
தப்பித்தவறி
ஏகலைவர்கள் சிலராவதுவந்தால்
கட்டை விரலை
காவுதரச் சொல்லுவது
என்ன கொடுமை?
இந்த அரங்கேற்று காதையே
அர்சுனர்களுக்குத்தான் என்றால்?
அதை அந்தப்புரத்தில்
வைத்துக்கொள்ளுங்கள்
பொதுவெளியில்
கர்ணர்களை காயப்படுத்துவது
என்ன கண்ணியம்?
இங்கு விதைக்கிறோம்
என்ற பெயரில்
அளவுக்குமீறி
ஆழப் புதைக்கப்பட்ட
விதைகள்
அடையாளம் தெரியாமல்
அடக்கம் செய்யப்படுகின்றன.
பாலைவனத்தில்
போராடி வளர்ந்த விதைகளிடம்
சோலைவனத்தின்
சுகங்களைப்பற்றி
விரிவான விடைஎழுதச்சொல்வது
என்ன நியாயம்?
சமபந்தி விருந்து
நம் தேசத்தில்
சாத்தியப்படாமல்
இருக்கும்போது
சத்தான பிள்ளைகளோடு
சவலைப் பிள்ளைகளை
மோதவிடுவது
என்ன தர்மம்?
மனித அறிவை
மதிப்பெண்கள்தான்
தீர்மானிக்கும் என்றால்
முதலில் அந்தத் தேர்வை
அரசியல் வாதிகளுக்கு
நடத்துங்கள்
புதன், 7 மார்ச், 2018
ஒரு தபால்காரன் தோன்றுவான்
சொற்களை மட்டும்
கூட்டிக் கொண்டே
போகிறவர்கள்
சொன்னவனை
கழித்துவிட்ட பிறகு
அதன் அர்த்தங்கள்
அனாதையாவதில்
விந்தையில்லை
உடலைக் கழற்றி
வைத்துவிட்டு
கேள்விக்கு
விடை சொன்னவன்
நேற்றோடு செத்துவிட்டான்
சொற்கள் வைத்த
கொள்ளியில்
சொர்க்க ரதம் ஏறிவிட்டான்
இனி அவன்
உங்கள் முன்
ஒரு தபால்காரனாய்த்
தோன்றுவான்
கடிதங்கள் சிரித்தாலென்ன
அழுதால் என்ன?