சிறுவயதில்
கண்டிப்பதற்காக
உன்னை அடித்தபோது
பெரியவனாகி
என்னை
அடிக்கப்போவதாகச்
சொன்னாய்
என்னைக்கேட்க
யார் நீ
என்ற உன் அக்கா
இப்போது
வருத்தப்படுகிறாள்
உன் லட்சியம்
நிறைவேற்ற
பதமான பருவமிது
அண்ணனாய் இருந்தால்
என்ன?
அடி
அழுது முடித்து
அப்புறம்
இந்த
நாய்க்குட்டிகளாவோம்.
- நீலமேகன்.