ஞாயிறு, 24 அக்டோபர், 2021

அழுது முடித்தபின்...

சிறுவயதில்
கண்டிப்பதற்காக
உன்னை அடித்தபோது
பெரியவனாகி
என்னை 
அடிக்கப்போவதாகச்
சொன்னாய்


என்னைக்கேட்க
யார் நீ
என்ற உன் அக்கா
இப்போது
வருத்தப்படுகிறாள்


உன் லட்சியம்
நிறைவேற்ற 
பதமான பருவமிது
அண்ணனாய் இருந்தால்
என்ன?
அடி

அழுது முடித்து
அப்புறம்
இந்த
நாய்க்குட்டிகளாவோம்.

- நீலமேகன்.


3 கருத்துகள்:

Unknown சொன்னது…

சிறப்பு📝

அருண்குமார். சே சொன்னது…

💐💐

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

அண்ணா என்றால் உயர்ந்தவன் என்று பொருள்! அனுபவத்திலும்,அறிவிலும்,உருவிலும் தம்பிகளுக்கோ தங்கைகளுக்கோ இது புரிவதே இல்லை.உலகமே அன்புக்கு ஏங்குகிறது.காசா பணமா ஆனால் யாரும் புரிந்துகொள்வதில்லை.சாப்பிட்டாயா? என்று கேட்பதற்குக் கூடாவா தயக்கம்? யாவர்க்குமாம் பிறர்க்கொரு இன்னுரைதானே!