சனி, 25 டிசம்பர், 2021

மிருகம்

என் புன்னகையைத்
திருடிவிட்டு
சிரிக்கிறான்

உண்மைதான்
மனிதன்
சிரிக்கத் தெரிந்த
மிருகம் என்பது...

குருட்டுத் தமயந்தி

நேற்று இரவு
சொற்களைத் தந்துவிட்டு
நீ உறங்கிவிட்டாய்

என்
எண்ணச் சுயம்வரத்தில்
ஆசை மீதூர
உன்னைக்
கண்டுபிடிக்க முடியாத
குழப்பத்தில்
மதிமயங்கி
எல்லோர் கழுத்திலும்
மாலையிட்டேன்

சுய நினைவு வந்து
சுற்றிப் பார்க்கையில்
அவை எங்கும்
சுய உருக்காட்டி
சிரித்து நிற்கும்
போலி நளன்கள்

ஆசை வளர்த்த
அன்னத்தின் கழுத்தறுத்து
தூதுவிட்டேன்
காற்றெங்கும்
ரத்த வாடை

திணை: கைக்கிளை

- ச. நீலமேகன்.

வெள்ளி, 24 டிசம்பர், 2021

நேர்மை

கைநீட்டி காசு வாங்கிவிட்டால்
சொன்னபடி செய்துவிடுவார் அவர்ரொம்ப 
நேர்மையான அதிகாரி ..!

ச. நீலமேகன்