இந்தமுறை
பொறுத்துக்கொள்
அடுத்தமுறையும்
கோபப்பட்டால்
நானே
தொலைந்திடுவேன்
ஒரு வேளை
நீ
தேடும்போது
நானோ
என் பிரதியோ
அகப்படலாம் இல்லையா?
- நீலமேகன்.
நீ
நடுக்கடலின்
நிசப்தம்
நானோ
கரைமோதும்
அலையின்
இரைச்சல்
நீ
ஆழ்கடலுக்குள் சென்று
அமைதியைப்
பிடித்து வருகிறாய்
நானோ
கரையோரம்
நின்று
இரைச்சலைப் பிடித்து
விற்கிறேன்
அர்த்தப்புயல்
வரும்போது
குறட்கடல்
கொந்தளிக்கிறது
நீ
கரை திரும்ப
காலதாமதம்
ஆனபோது
மீனிலிருந்து
விழுகிறது
இரண்டு சொட்டு
கடல்.
- ச. நீலமேகன்