எதிரிகள்
துப்பாக்கியோடு
நிற்கிறார்கள்
நீங்களோ
கோல்கொடுத்து
அனுப்புகிறீர்கள்
சொல்லுங்கள்
தமிழ்
வெல்லுமா !
மலடி என்றாள்
மாமியார்
அவளை
அம்மா
என்றழைத்தது
அவள் வீட்டுப்
பசு
சட்டம்
அடித்தால்
குற்றம் என்கிறது
அழுதால்
கோழை என்கிறது
ஊமையாய்
நீதி
பொதுவுடமை வாழ்வது
அரசு விடுதிகளில்
மட்டும்தான்
உள்ளாடை தவிர்த்து
உள்ளதனைத்தும்
பொது