வெள்ளி, 17 நவம்பர், 2017

அறமும் - கடவுளும்

நடுச்சாலையில்
நசுங்கிச் சாகின்றன
காலம் மாறிவிட்டது
தெரியாமல்
இன்னும்
பழைய வேகத்திலேயே
சாலையைக் கடக்கும்
நத்தைகள்...

பழைய ஞாபகத்தில்
நியாயம் கேட்கப்போன
மனுநீதிச் சோழனின்
கன்னத்தில்
யாரோ அறைந்த
சப்தம்

ஆற்றாமையில்
அழுதுகொண்டே
அறங்களை வாரியெடுத்த
மனுச் சோழன்
மாரடைப்பால்
மரணித்தான்

மீண்டும்
உயிர்ப்பிக்க
நினைத்த கடவுள்
பூமிக்கு வந்தால்
சுவாசக் கோளாறு
ஏற்பட்டுவிடுமோ
என்ற பயத்தில்
பதுங்கிக் கொண்டார்.

4 கருத்துகள்:

செ.பாலமுருகன் சொன்னது…

இன்றும் கன்றுகள் இறக்கின்றன. அமைச்சர்கள் உடற்கூராய்வை திருத்தியபடியும். இளவரசர்களின் தந்தைகள் பசுக்களை சிறையில் அடைக்கின்றனர். நன்றி மறந்த நாய்க்கு மரணதண்டனையாம். மன்னர்களுக்கு???

paalveli-athirvugal சொன்னது…

நாம் மாற்றி அமைத்து விட போராடும் காலத்தால் நத்தையாய் நசுங்குகின்றன நியாயங்களும் அறமும் - எக்காலத்தில் கடவுள் வரபோவதில்லை எனத் தெரிந்தே எல்லா காலமும் பாதுகாப்பது எல்லாம் நம் மடமை. சிறப்பு

ச. நீலமேகன் சொன்னது…

நன்றி

ச. நீலமேகன் சொன்னது…

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி!