பொறுமை
இல்லையென்கிறாய்
ஆசை
கூடாதென்கிறாய்
அடக்கம்
வேண்டுமென்கிறாய்
ஒப்பனை
மிகுதி என்கிறாய்
காரணங்கள் சொல்லி
காலம் கடத்துகிறாய்
உன்னை நினைத்தே
உருகிக் கிடப்பவளை
எந்த அச்சில்
வார்க்கப் போகிறாய்
இன்னும்
தாமதித்தால்
அவள் ஆவியாகலாம்
நீ அலைந்து திரியலாம்
எது உனக்குச்
சம்மதம்.
- ச. நீலமேகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக