அகராதி – கலைக்களஞ்சியம் வேறுபாடு.
அகராதி
என்பது அகரவரிசைப்படி சொற்கள் தொகுக்கப்பட்டு அச்சொற்களுக்கான பொருளையோ அல்லது அச்சொல்
தொடர்பான வேறுபல விவரங்களையோ விளக்கும் ஒரு கருவி நூல் ஆகும்.
கலைக்களஞ்சியம்
என்பது ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய முழுமையான விளக்கம், தனிச்சிறப்பு, பயன்பாட்டு எல்லைகள், பரந்த அறிவுத்
துறையில் அச்சொல் எத்தகைய தொடர்புகளைக் கொண்டுள்ளது போன்ற ஆழமான தகவல்களைத் திரட்டித்
தரும் அகர வரிசையில் அமைந்த தொகுப்பு நூலாகும்.
விக்கிமீடியா அறக்கட்டளை
அமெரிக்கர்களான
ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் விக்கிமீடியா அறக்கட்டளை
நிறுவப்பட்டது.
ASI
- Archaeological Survey of India
ASI - Archaeological Survey of India இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம்
( ASI ) என்பது இந்திய அரசு நிறுவனமாகும், இது இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் கலாச்சார வரலாற்று
நினைவுச்சின்னங்களை பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிறுவனம்
1861 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவரால்
நிறுவப்பட்டது.
இந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனம்
இந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனம் (Indian Institute of Research in Numismatic Studies) இந்தியாவில் மகாராஷ்டிரா
மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1980 ஆம் ஆண்டில்
நாணயவியல் நிபுணர் பரமேஸ்வரி லால் குப்தா மற்றும் தொழிலதிபர் கே.கே. மகேஸ்வரி
ஆகியோரின் முயற்சியால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம்
நாணயவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு தருவதை நோக்கமாகக்
கொண்டுள்ளது.
அரிக்கமேடு
தொல்பொருளாய்வு
சார்ந்த இடமான அரிக்கமேடு புதுவை மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்
வழி தென்னிந்தியர்கள் ரோம் நகருடன் கொண்டிருந்த
வாணிபத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது.
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
அரசினர்
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா
நூற்றாண்டு நூலகத்தின் 7-ஆம் தளத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், சமஸ்கிருதம், கன்னடம்,
தெலுங்கு, உருது உள்ளிட்ட பல மொழியில் கிடைந்த ஓலைச் சுவடிகளும், காகிதச் சுவடிகளும்
பாதுகாக்கப்பட்டு வருவதோடு பதிப்பிக்கப்பெற்று நூலாக வெளியிடப்பட்டும் வருகிறது.
உலகிலேயே
அதிகமான தமிழ்ச் சுவடிகள் இந்த நூலகத்தில்தான் உள்ளன. இங்கு, 72,748 சுவடிக் கட்டுகளும், 25,373 ஆய்வு நூல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந் நூலகம் உருவாவதற்கு காலின் மெக்கன்சி (1754-1821), லேடன் (Dr.LeYdan), சி.பி.பிரௌன் (Mr.C.P.Brown) ஆகிய மூவரின் தொகுப்பு முயற்சிகளே காரணமாக அமைந்தது.
ஆவணக் காப்பகம்
தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக்காப்பகம் அல்லது
சென்னை ஆவணக் காப்பகம் (Madras Record
Office) என்பது தமிழ்நாட்டில், சென்னையில் எழும்பூர் ரயில்
நிலையம் எதிரில் அமைந்துள்ளது.
சரஸ்வதி மகால் நூலகம்
சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பழமையான
நூலகங்களுள் ஒன்றாகும்.
இங்குத் தமிழ், தெலுங்கு, சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், இலத்தீன், கிரேக்கம் முதலிய பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன.
இங்கு வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம் உள்ளிட்ட பல்துறை நூல்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக