செவ்வாய், 25 மே, 2010

கடித இலக்கியம்

கடித இலக்கியம்
எழுத்துக்கள் மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் தொடர்ப்பு கொள்ள கடிதங்கள் உதவுகின்றன. அந்த வகையில் கடித வடிவத்தையே இலக்கிய வடிவமாக்கி ஒருவர் படிக்கும் நிலையிலிருந்து, பலரும் படிக்க வாய்ப்பாக, கடிதங்கள் எழுதும் வடிவில் பல கருத்துக்களைத் தெரிவிப்பது கடித இலக்கியம். மேலை நாட்டினர் இதனை ஒரு கலையாகவே வளர்த்து வருகின்றனர்.
தமிழில் கடித இலக்கிய முன்னோடியாக அறிஞர் அண்ணா, டாக்டர். மு.வ., அவர்களைக் குறிப்பிடலாம். அறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ என்ற இதழில் “தம்பிக்கு” என்ற பெயரில் தமிழ்நாட்டின் பழம்பெருமைகளையும், அன்றைய சமூக அரசியல் சிக்கல்களையும் ஆற்றல் வாய்ந்த நடையில் கடித நூல்களாகத் தந்துள்ளார்.
மு. வ. அவர்கள் “அன்னைக்கு”, “நண்பர்க்கு”, “தம்பிக்கு”, “தங்கைக்கு” என்று ஒரு குடும்பமே சமூகச் சிக்கல்களைக் கூறுபோட்டுக் காட்டும் வகையில் தமது கடித இலக்கியத்தை உணர்வுப்பூர்வமாக வடித்துள்ளார். மேலும் டாக்டர். சொ. சிங்கார வேலனார் “புதுமைக்கு” என்ற பெயரிலும், பேராசிரியர் மு. சு. அருள்சாமி “தோழர்க்கு”, “காதலிக்கு” என்ற பெயரிலும் தங்கள் கடித இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: