தாய்மை உலகிற்கு வழங்கிய இலக்கியக் கொடை தாலாட்டாகும், தாயின் நாவசைவில் தாலாட்டுப் பிறக்கிறது. தால்+ஆட்டு (தால் – நாக்கு) நாவை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு எனப் பெயர்பெற்றது. தாலாட்டுப் பாடல் நாவசைத்து ஒலியெழுப்புதலில் தொடங்குகிறது.
தாலாட்டுப் பாடலின் அடியளவு.
தாலாட்டுப் பாடல்களுக்கு அடிவரையறை என்பது கிடையாது. தாயின் மனப்போக்குக்கு ஏற்றவாறும், குழந்தை உறங்க எடுத்துக்கொள்ளும் காலத்தைப் பொறுத்தும், தாலாட்டின் பாடும் நேரம் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்கும். தாலாட்டுப் பாடல் நீலாம்பரி என்ற பண்ணில் அமைந்திருக்கும்.
தாலாட்டுப் பாடுவோர்
தாலாட்டுப் பாடுவோர் தாயாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, தாய்குப் பதிலாகக் குழந்தையின் அத்தை, சித்தி, பாட்டி, அக்கா, மற்றும் உறவினர் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
பாடல் பொருண்மை
தாலாட்டுப் பாடல்களை குழந்தை தூங்குவதற்காகத் தாய் பாடினாலும், அதனூடே அத்தாயின் எண்ணங்கள், ஏக்கங்கள், துன்பங்கள், துயரங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், குழந்தை இல்லாத காலத்தில் தான் பட்ட வேதனைகள், பழிச்சொற்கள், குழந்தை வேண்டி தான்கிடந்த தவங்கள், செய்த அறங்கள், உறவினர் பெருமை சிறுமை, தாய்வீட்டுப் பெருமை, தாய்மாமன் பெருமை போன்றன பாடல் பொருண்மைகளாக இருக்கும்.
குழந்தை இல்லாத காலத்தில் ஏங்கிப் பாடியது.
1. கிண்ணியிலே போட்ட சோற்றைக்
கீறித் தின்னப் பிள்ளை இல்லை
ஊருக்குப் போகையிலே
உடன்வரப் பிள்ளை இல்லை
2. பூக்கிற காலத்திலே
பூமாறிப் போனேனே!
காய்க்கிற காலத்திலே
காய்மாறிப் போனேனே.
3. எட்டாத கோவிலுக்கு
எட்டி விளக்கேற்றி
தூரத்துக் கோவிலுக்குத்
தூண்டா விளக்கேற்றி..
பிறந்த குழந்தையை தாய் வருணித்தல்
1. மாசிப் பிறையோ நீ வைகாசி மாங்கனியோ
தேசப் பிறையோ நீ தெவிட்டாத மாங்கனியோ
எங்கள்குலம் மங்காமல் எதிர்குலத்தோர் ஏசாமல்
தங்கமலி பொக்கிஷத்தைத் தானாள வந்த கண்ணோ.
தாய்மாமன் பெருமை
1. கடைக்குக் கடை பார்த்துக்
கல்லிழைத்த சங்கெடுத்துச்
சுத்திச் சிகப்பிழைத்துத்
தூருக்கே பச்சைவைத்து
வாய்க்கு வயிரம் வைத்து
வாங்கி வந்தார் தாய்மாமன்.
2. வெள்ளியால் செய்த ஏட்டில்
வைர எழுத்தாணி கொண்டெழுத
பள்ளியில் சேர்க்க மாமன்
பரிவுடன் வந்திடுவார்.
3. பால் குடிக்கக் கிண்ணி
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்.
4. ஆனை விற்கும் வர்த்தகராம் – உன் தாய்மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே – உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே – உனக்கு
கட்டிக்கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும் – கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு – கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ!
உறவினர் பெருமை
1. சின்னாத்தங் கரையோரம் – எஞ்சின்னையா நீ
சிறு மணலுக் கொழிக் கையிலே – உன்
சின்ன அத்தைக் கண்டாளாம் – உனக்குச்
சீட்டெழுதி விட்டாளாம்!
பெரி யாத்தங் கரையோரம் – எஞ் சுப்பையா நீ
பெரு மணலுக் கொழிக் கையிலே – உன்
பெரிய அத்தைக் கண்டாளாம் – உனக்குப்
பேரெழுதி விட்டாளாம்!
பனை பிடிங்கிப் பல் விளக்கி – நீ
பயிர் போல நாமமிட்டால்
நாமத்தின் அழகுகண்டு
நச்சுவாளாம் அத்தை மகன்
துணை நின்ற நூல்கள்
1. சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், 2009.
2. சு. சண்முகசுந்தரம், நாட்டுப்புறவியல், காவ்யா, 2007.
3. நா. வானமாமலை, தமிழர் நாட்டுப் பாடல்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2006.

1 கருத்து:
மிகவும் அருமை.
கருத்துரையிடுக