இலை உதிர்ந்த
மரத்தடியில்
நிழலின் சருகுகள்...
அவை சலசலக்கும்
ஓசை கேட்டு
கண்விழிக்கிறான்
ஞானி.
- நீலமேகன்.
அந்திம வாழ்க்கைக்கு
சூடான சுண்டல்விற்று
உயிர்ச்சுடர் ஏற்றுகிறாள்
யாருமற்ற கிழவி ….
“சாகிற காலத்தில
இதெல்லாம் வாழ்ந்து
என்ன செய்யப்போகிறது…"
எனும் சாகாதவர்களின்
சொல் கேட்டு
ஒவ்வொரு நாளும்
சுடர் அணைக்கக்
காத்திருந்த காலத்தின்
குழவி நாணும்
பின்பு
நொடிநொடியாய்ச்
சாகும்.
- நீலமேகன்.
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்
கழுத்தோ
காலோ
சடையோ
இடையோ
அஞ்சி நடுங்கி
அலங்கரிக்கும் பாம்பு
சிவனைத் துதிபாடும்
கடவுள்
அயர்ந்த வேளையில்
ஆளை மிரட்ட
அது
ஜதிபோடும்
ஒண்டவந்த
கழுத்தை இறுக்கி
மெல்ல
உரு மாறும்
பின்பு சிவனாகும்
நீலமேகன்