வியாழன், 28 செப்டம்பர், 2023

தமிழ் மென்பொருள்கள்

தமிழ் மென்பொருள்கள்

சமூகச் சூழல்களுக்கு ஏற்ப  தமிழ் மொழி காலந்தோறும் பல்வேறு துறைகளில் வளர்ச்சிபெற்று வந்துள்ளது. அதிலும் குறிப்பாகச் சமயங்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் இலக்கண வளர்ச்சிக்கும் ஆற்றிய பணி அளப்பரியது. அச்சு இயந்திரங்களின் வருகையால் சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரை பல்வேறு இலக்கிய வகைகளால் வளப்படுத்தப்பட்டு வந்த தமிழ்மொழி மிகப்பெரிய வளர்ச்சி கண்டது. அதன் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் மொழியைப் பயன்பாட்டு அடிப்படையில் வளப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளால் இன்று கணினியிலும், இணையத்திலும் தமிழ்மொழி இடம்பிடித்து உலக அரங்கில் தன் பெருமையை நிலைநாட்டி வருகிறது.

எந்த மொழி காலச் சூழலுக்கு ஏற்ப புதுமைகளுக்கு இடங்கொடுத்து இயங்கும் தன்மையுடையதாக இருக்கிறதோ அது பலராலும் பயன்படுத்தப்படும் மொழியாக விளங்கும். மேலும் எந்த மொழி வணிகத்தோடும் அறிவியலோடும் தொடர்புடையதாக இருக்கிறதோ அந்த மொழி உலகமொழியாக விளங்கும். அதனால் அந்த மொழி பேசும் மக்களினம் பெருமளவில் முன்னேற்றமடையும்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கணினி, திறன்பேசி மற்றும் அதனூடான இணையம்  என்ற ஊடகத்தின் வழி மக்களின் தமிழ் மொழிப்பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் தொழில் நுட்ப உலகில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதோடு அம்மொழி வழங்கும் சமூகம் அறிவார்ந்த சமூகமாக மாறுவதற்கு வழி ஏற்படுகிறது. இதனை நடைமுறைப்படுத்தும் நோக்கில் பல்வேறு மென்பொருட்கள் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள மென் பொருட்களின் வகைகளையும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் இங்கு அறிந்துகொள்ளவிருக்கிறோம்.

கணினியில் தமிழ்

கணினியில் தமிழ் மொழியின் பயன்பாடு 1980 களில் தோற்றம் பெற்றது. கணினியில் தமிழ் கடந்துவந்த வரலாற்றை நோக்கும்போது எழுத்துருக்களே(Fonts) அதன் தொடக்கமாக அமைகிறது. 1985 க்குப் பிறகான பத்து ஆண்டுகளில் டாஸ், யூனிக்ஸ், மேக் இயங்குதளத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் எழுத்துருக்களும், ஆவணங்களை அச்சிடக்கூடிய சொல் செயலாக்க மென்பொருள்களும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தமிழர் வாழும் அயல்நாடுகளிலும் உருவாக்கப்பட்டன. கம்பன், நளினம், தாரகை என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கன.

அதனைத் தொடர்ந்து Softview, Lasstec, Applesoft போன்ற நிறுவனங்கள் பத்திரிக்கைத்துறைக்கு எழுத்துருக்களையும் மென்பெருள்களையும் உருவாக்கிக் கொடுத்தன. தொடக்க காலத்தில் தமிழில் கணினிப் பயன்பாடு அதிகரித்தபோதிலும் தரப்படுத்தப்படாமல் அவரவர் விருப்பம்போல் மென்பொருள் பயன்பாடு இருந்துவந்தது. இதனால் ஒரு கணினியில் ஒரு குறிப்பிட்ட மென்பொருளைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஆவணத்தை மற்றொரு கணினியில் பயன்படுத்துவது பெரும் இடர்பாடாக இருந்தது. பிறகு எழுத்துரு, விசைப்பலகை, மென்பொருள் உருவாக்கம் ஆகியவற்றில் தரப்படுத்தும் நிலை ஏற்பட்டு கணினியில் இன்று தமிழைப் பயன்படுத்துவது மிக எளிதான ஒன்றாக மாறியுள்ளது.

இணையத்தில் தமிழ்

90களில் தொடங்கப்பட்ட இணையத்தின் அறிமுகம்  தகவல் தொடர்பு வளர்ச்சியின் உச்சமாக இருந்தது. மின்னஞ்சல் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழில் அச்சில் வெளிவந்த இதழ்கள் இணையத்தில் இடம்பிடித்தன, இணையத்தில் மட்டுமே வெளிவரும் மின்னிதழ்களும் வெளிவரத் தொடங்கின. ஆனால் அவை வெவ்வேறு குறிமுறையில் அமைந்த எழுத்துருக்களைக் கொண்டிருப்பதால் அவற்றைப் பயன்படுத்துவதில் சில இடர்பாடுகள் இருந்தன. அவற்றைப் படிக்க அந்தந்த குறிப்பிட்ட எழுத்துருக்களை தறவிரக்கம் செய்து நிறுவவேண்டியிருந்தது. பிறகு அவ்வப்பொழுது நடத்தப்பட்ட இணைய மாநாடுகள் வாயிலாக விவாதங்கள் நடத்தப்பட்டு அவை தரப்படுத்தப்பட்டன.

தமிழ்ச்சொல்லாளர்(Word Processor)

தட்டச்சுசெய்து பக்க வடிவமைத்து ஆவணங்களை உருவாக்கும் சொற்செயலிக்கு Word processor என்று பெயர். அவற்றுக்கு உதாரணமாக MS Word, Libre Office Writer, Open Office Writer, Kingsoft Writer போன்ற மென்பொருள்களைக் குறிப்பிடலாம். இவை ஆங்கில மொழிப் பயன்பாட்டுக்கு என்று உருவாக்கப்பட்டவை. அவற்றைப் பயன்படுத்தியே தமிழிலும் ஆவணங்கள் உருவாக்கப்பட்டு வந்தன. ஆனால் அவற்றிலுள்ள மொழிக் கருவிகள் ஆங்கில மொழிப் பயன்பாட்டுக்குப் பயன்படுமே தவிர தமிழ்மொழிக்குப் பயன்படுவதில்லை.

இதனைக் கருத்தில் கொண்டு மொழிக் கருவிகளான சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி போன்ற மொழிக்கருவிகளைக் கொண்ட தமிழ் மென்பொருள் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன. இதற்கு எடுத்துக்காட்டாக, மென்தமிழ் (Men Tamizh), பொன்மொழி(Ponmozhi) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

மென்பொருள் தொகுப்புகள்

1.மென்தமிழ் (Men Tamizh)

                விசைப் பலகைகள்

                ஒருங்குறி எழுத்துருக்கள்

                குறியேற்ற மாற்றி

                சொற்பிழை திருத்தி

                சந்திப்பிழை திருத்தி

                தமிழ்ச்சொல் சுட்டி

                அகராதிகள்

                அகரவரிசைப்படுத்துதல்

                சொல்லடைவு

                துணைநூற்பட்டியல் கருவி

                எண் – எழுத்து மாற்றி

என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MS Word க்கு இணையாக மேற்குறித்த மென்பொருட் தொகுப்புகளைக் கொண்ட ஒரே தொகுப்பு மென்பொருளாக “மென்தமிழ்ச் சொல்லாளர்” என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் அரசு அலுவலகங்களில் அம்மா மென்தமிழ் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இம்மென்பொருளை NDS Lingsoft Solutions Pvt. Ltd என்ற நிறுவனத்தின் சார்பாக சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்மொழித்துறைத் தலைவர் பேரா. ந. தெய்வசுந்தரம் அவர்கள் உருவாக்கியுள்ளார்.

2. பொன்மொழி(Ponmozhi)

அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் வெ. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் உருவாக்கப்பட்ட இம்மென்பொருளில்,

விசைப் பலகைகள்

ஒருங்குறி எழுத்துருக்கள்

                குறியேற்ற மாற்றி

                சொற்பிழை திருத்தி

                சந்திப்பிழை சுட்டி

                அகராதிகள்

உள்ளிட்ட மொழிக் கருவிகள் இடம்பெற்றுள்ளன.

விசைப் பலகைகள்

அழகி

வானவில்

இண்டோவோர்டு

இளங்கோ

ஶ்ரீலிபி

கீமேன்

எ-கலப்பை

கம்பன்

கணியன்

குறள்

மென்தமிழ்

பொன்மடல்

இண்டிக் விசைப்பலகை

தமிழ்நாடு அரசு விசைப் பலகை

கீழடி 

சொற்பிழை திருத்தி(Spell Checker)

சக்தி ஆபீஸ்

விசைத்தமிழ்

Libre Office சொற்பிழை திருத்தி

Ms office 2013 சொற்பிழை திருத்தி 

வாணி சொற்பிழை திருத்தி   - இங்கே சொடுக்கவும்👈


சந்திப்பிழை திருத்தி(Sandhi Checker)

மென்தமிழ்

பொன்மொழி

நாவி சந்திப் பிழை திருத்தி - இங்கே சொடுக்கவும்👈

குறியேற்ற மாற்றி(Encoding Converter)

 

       மாற்றி 1

       மாற்றி 2

       மாற்றி 3

       மாற்றி 4

       மாற்றி 5

       மாற்றி 6

       மாற்றி 7

       மாற்றி 8

       மாற்றி 9

       மாற்றி 10

       மாற்றி 11

       NHM Converter  - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

இலக்கணப்பிழை திருத்தி(Grammar Checker)

எந்திர மொழிபெயர்ப்பு(Machine Translation)

எழுத்து பேச்சு மாற்றி(Text-to-Speech)

                Jaws Screen Reader

                NVDA e-Speak

                Thirukural TTS

       http://text2speech.tamilnlp.com/

       http://spellcheck.tamilnlp.com/

 

பேச்சு எழுத்து மாற்றி(Speech-to-Text)

       மாதிரி 1.

       மாதிரி 2

       மாதிரி 3

       மாதிரி 4

       மாதிரி 5

       மாதிரி 6

       மாதிரி 7

       மாதிரி 8

       மாதிரி 9

       மாதிரி 10

       மாதிரி 11

       மாதிரி 12

ஒளியெழுத்துணரி(OCR)

  •   பொன்விழி
  •    தமிழ்ஞானி

       இணைப்பு 1

       இணைப்பு 2

       இணைப்பு 3

 கையெழுத்துணரி(Handwritten Recognition)

 

பொன்மடல்

Google Input Tools (Tamil Hand write)

 

யாப்பு மென்பொருள்(Tamil Prosody Analyzer)

அவலோகிதம்  இணைப்பு 1

ஒலிபெயர்ப்பு மென்பொருள்(Transliteration)

மென்தமிழ்

                அனுநாதம் - இணைப்பு 1

எழுத்துமுறை மாற்றி(Language Script Converter)


அக்ஷரமுகா

என் மொழியில் பாரதம்

தமிழ்ச்சொல் சுட்டி(Native Word Suggestion)

                மென் தமிழ்

மின்பெயர்ப்புகள்

இணைப்பு 1

இணைப்பு 2

இணைப்பு 3

இணைப்பு 4

இணைப்பு 5

இணைப்பு 6

இணைப்பு 7

இணைப்பு 8

இணைப்பு 9

இணைப்பு 9

இணைப்பு 10

இணைப்பு 11

இணைப்பு 12

இணைப்பு 13

இணைப்பு 14

இணைப்பு 15

இணைப்பு 16

இணைப்பு 17

 

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

வாழை மரத்தின் சபதம் -கண்ணீர்ப் பூக்கள் - மு.மேத்தா

    

கவிஞர் மு. மேத்தா





கண்ணீர்ப் பூக்கள்

மு. மேத்தா 

வாழை மரத்தின் சபதம்

 

வளமான சூழ்நிலையில் வளர்வேன் - ஆனால்
வறியவரின் கைகளிலே தவழ்வேன்

மலிவான விலையில்நான் கடைகளிலே
கிடைப்பேன்ஏழை
மக்களது ஆப்பிள்மரம் என்ற பெயர்

எடுப்பேன்!
மரங்களில் நான் ஏழை - எனக்கு
வைத்த பெயர் வாழை!
*
கருத்தாங்கிப் பிள்ளையினைப் பெற்றெடுத்துக்
கண்மூடும் புத்திரிநான் எனக்குக் கீழே
குருத்துவிடும் கன்றுக்கு வழியை விட்டுக்
குறிப்பறிந்து ஒதுங்குவதால் -
தலைமுறையின் தத்துவத்தைப் புவிக்குக் காட்டும்.
தடயம் நான்!
வானத்தைத் தொடுவதற்குக் கனவு காணும்
வழக்கமில்லை என்னிடத்தில் மயக்கயில்லை!
மானிடரின் புழுதிக்கால் பதியும் இந்த
மண்ணுடன் என் உறவதிகம்! ஆத லாலே.
 
மரங்களில் நான் குட்டை மரம்
மனிதர்களின் கைகளுக்கு
இலகுவாக எட்டும் மரம்!
 
மானிடர் செய்யும் சிவப்பு விளம்பரம்
மதிலின் முதுகில் மாட்டியிருக்கும் – நானோ
தானாய் எழுந்து தட்டி கட்டிய
தரையின் பச்சை விளம்பரப் பலகை!
 
அழைப்பிதழ்கள் திருமணத்தின்
அறிமுகங்கள்! நாங்கள்
அடையாள மரங்கள்!
 
கல்யாண வீடுகளில்
காவலுக்கு நிற்கும்
துவார பாலகர்கள்!
 
குட்டை மரமெனும் குறையை – என்
பெரிய இலைகளால் பெயர்த்துத் தகர்த்தவன் நான்.
என் இலைகள்...
மயிலிடம் கடன் வாங்காத
பச்சை நரம்புகளால் ஆன
தோகைகள்!
 
கலைகளில் இன்றியமையாத
சமையற் கலை – என்
இலை வாகனத்தில்
ஏறி வரும்போது
 
விரல் வரவேற்பு
விரைவாகக் கிடைக்கும்!
 
என் இலைகள்...
உபசரிப்பின் இலக்கியங்கள்
விருந்தினரின் அந்தஸ்தை
எடைபோடும் இயந்திரங்கள்!
 
சோற்று பூமியின்
சொர்க்க வாசல்கள்
ஏழை வயிறுகளின்
இலட்சியக் கனாக்கள்!
 
இந்த மனிதர்கள்
உண்பதற்கு முன்னர்
உணவு இலை என்பார்கள்
உண்டு முடித்த பின்னர்
எச்சில் இலையென்று
எறிந்து விடுவார்கள்
 
கூடத்தில் மரியாதைப் பூச்சு
குப்பைத் தொட்டிகளில் எங்கள்
ஆயாச மூச்சு!
 
தொட்டி இலையையும்
துடைத்துச் சாப்பிட
இந்த தேசத்தின்
தெரு ராஜாக்கள்
ஒருவரோடொருவர்
கட்டிப் புரள்கிறபோது
 
எதிர்கால இருட்டை
எண்ணிப் பதைக்கிற – என்
இதய வேதனைக்கு
உவமைகள் ஏது?
*
மனித மரங்களைப் பார்த்துப் பார்த்து
மற்ற மரமெலாம் வேர்த்து வேர்த்து
மனப் புழுக்கத்தின் குலுக்கல் – அதில்
வந்து கனிந்தவை பழங்கள்!
 
பகை மூட்டிப் பழுக்க வைக்கும்
பழங்களினால் உலகில்
பாகிஸ்தானில் நடந்தது போல
பாகப் பிரிவினை நடக்கும்
 
புகை மூட்டிப் பழுக்க வைக்கும் - என்
புரட்சிப் பழங்களினால்
பூ வயிறு சிரிக்கும்
பொலிவிழந்த உடல் செழிக்கும்.
 
மறுபடியும் உழைப்பதற்குப்
புதுவலிமை பிறக்கும்
 
சீவாத தலையோடு பிறருடைய தலையைச்
சிங்காரம் செய்வதற்குப் பூச்சரங்கள் தொடுக்கும்
பாவாடைக் காரிகளின் நளின விர லோடு
பழக்கமுள்ள நாருக்குப் படைப்பாளி நான்!
 
அந்த நார்கள்
என்னுடைய
உடை உரிப்புகள்
சத்தம் போடாத
சதைக் கிழிசல்கள்!
 
பூவைப் போல் உயர் பிறப்பு
இல்லாத நாரை
பூக்களுடன் சேர்த்துவைத்துச்
சம மரியாதை
வாங்கித் தந்ததென்
சுய மரியாதை!
*
என்
மட்டைச் சட்டையோ –
சோர்ந்த நாசிக்குச்
சுறுசுறுப்புக் கொடுக்கும்
மூக்குப் பொடியின்
தூக்குத் தூக்கி!
 
புகையிலைத் தூளின்
பொட்டலப் பெட்டகம்!
 
மரங்களில் நான் ஏழை எனக்கு
வைத்த பெயர் வாழை 
*
எப்போதும் நான்
என்
இலைச் சிறகுகளை
விரித்தே வைத்திருப்பதால்
 
பறக்கத்
தயாராயிருக்கும்
மிக் விமானம் போல
பார்வைக்குத் தெரிகிறேன்.
 
இதனால் -
இந்த
மண்ணில் பெருகிவரும்
மாபெரிய கொடுமைகளை
கோடையிடித் தாக்குதலை
கூக்குரலின் ஆர்ப்பரிப்பை
கொலைகளது கணக்கெடுப்பைக்
கண்டு மனமொடிந்து
மனமிடிந்து
 
என்றேனும் -
என்றேனும் ஒரு நாள்
இந்த பூமியிலிருந்து
பறந்து போய்விடுவேன்
என்று
எவரேனும் எதிர்பார்த்தால் –
அவர்கள்
ஏமாந்து போனார்கள்!
 
நான் - 
மண்ணில் வேரோடி
மாநிலத்தில் கால் பதித்து
வீசும் புயற்காற்றை
விழும் வரைக்கும் நின்றெதிர்ப்பேன்
 
நின்றெதிர்த்த முடிவினில் நான்
நிலத்தில் விழுந்து விட்டால் – என்
கன்றெதிர்க்கும்! கன்றுடைய
கன்றெதிர்க்கும்! கன்றுகளின்
கன்றெதிர்க்கும்!
 
நான் -
 
வெட்ட வெட்டத்
துளிர்ப்பேன்: தழைப்பேன்:
இறப்பின் மடியினில்
கண்கள் விழிப்பேன்!
 
என்
ஒவ்வொரு இறப்பும்"
ஒவ்வொரு பிறப்பு!
 
ஒவ்வொரு பிறப்பும்
தனித்தனிச் சிறப்பு!
 
மானுட சந்ததி
மறையாத சந்ததி
 
நானும் அந்த
ஜீவ சங்கிலி
அறுந்து படாமல்

தொடர்ந்து வருகிற
தவிப்பின் துடிப்பு!
 
பூமியின் புல்லரிப்பு
புதுமைகளின் இணைப்பு
புதுயுகத்தின் கனைப்பு!
 
நான்
தனிவாழை
அல்ல...
வாழையடி
வாழை!

**