செவ்வாய், 5 செப்டம்பர், 2023

நம்பி அகப்பொருள்

நம்பி அகப்பொருள்

 

ü நம்பி அகப்பொருள், அகப்பொருள் இலக்கணத்துக்கென்று உருவான தனிப்பெரும் நூலாக விளங்கிவருகிறது.

 

ü இது தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தை விளக்க எழுந்த ஒரு சார்பு நூலாகும்.

 

ü இந்நூல் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றியது.

 

ü இந்நூலின் ஆசிரியர் நாற்கவிராசநம்பி ஆவார்.

 

ü ஆசுகவி - மதுரகவி - சித்திரக்கவி - வித்தாரக்கவி என்னும் நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் பெற்றவர் என்பது கருதி ‘நாற்கவிராசன்’ என அழைக்கப்பட்டவர்.

 

ü நம்பி, என்பது இவரது இயற்பெயர், சமண சமயத்தவர்.

 

ü இவர் தம் அகப்பொருள் நூலுக்கு “அகப்பொருள் விளக்கம்” என்றே பெயரிட்டார். இவரே  இந்நூலுக்கு உரையும் எழுதியுள்ளார்.

 

ü பொய்யாமொழிப் புலவர் இயற்றிய “தஞ்சைவாணன் கோவை” என்ற நூல் நம்பியகப்பொருளுக்கு உதாரண நூலாக விளங்குகிறது.

 

ü இந்நூல் அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்னும் 5 இயல்களாகப் பகுக்கப்பட்டு,  252 நூற்பாக்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

 

ü பல்வேறு கால கட்டங்களிலும் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களுள் நம்பியகப்பொருள் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை: