புறப்பொருள் வெண்பாமாலை
v ஓர் ஒழுங்கமைவில்(பூக்களை
வரிசைப்படத் தொடுத்து மாலையாக்குவதைப் போல) புறப்பொருள் இலக்கணம் பற்றி வெண்பாவால்
இயற்றப் பெற்றது என்பதால் இந்நூல் புறப்பொருள் வெண்பாமாலை என்ற பெயரைப் பெற்றது.
v வெண்பாமாலை என்பது
ஆசிரியர் ஐயனாரிதனார் இட்ட பெயர்.
v வெண்பாமாலைகள் பல
உண்டு ஆதலின் இந்நூலைக் குறிப்பாகச் சுட்டும் வகையில் புறப்பொருள் வெண்பாமாலை என்ற
பெயரைப் பெற்றது.
v புறப்பொருள் வெண்பா
மாலைக்கு முதல் நூலாக “பன்னிருபடலம்” என்ற இலக்கணநூல் குறிப்பிடப்படுகிறது.
v இயற்றியவர்
சேரவேந்தர் மரபில் தோன்றிய ஐயனாரிதனார் ஆவார்.
v இவரது காலம்
கி.பி.7ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்பது
ஆய்வாளர் கருத்து.
v அகப்பொருள்
இலக்கணத்திற்கு தோன்றியதைப்போல (அகப்பொருள் விளக்கம் என்ற நூலுக்குப் பின்னரும்
மாறனகப் பொருள்,
இலக்கண விளக்கம், களவியற் காரிகை)புறப்பொருள்
வெண்பா மாலைக்குப் பின் புறப்பொருள் இலக்கணத்தைக் கூறும் தனி இலக்கண நூல்கள்
எவையும் தோன்றவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
v தொல்காப்பியர்
புறத்திணைகளை வெட்சி, வஞ்சி,
உழிஞை, தும்பை, வாகை,
காஞ்சி, பாடாண் என ஏழாகக் குறிப்பிடுகிறார்,
v ஐயனாரிதனார் வெட்சி, கரந்தை,
வஞ்சி, காஞ்சி, உழிஞை,
நொச்சி, தும்பை, வாகை,
பாடாண், பொதுவியல், கைக்கிளை,
பெருந்திணை எனப் புறத்திணைகளைப் பன்னிரண்டாகப் பகுத்துக்
கூறுகிறார்.
v இவ்வரிய நூலின்
உரையாசிரியர், சாமுண்டி தேவ நாயகர் என்பவர் ஆவார்.
v இவ்விலக்கண நூல் 12
திணைகளையும் 341 துறைகளையும் கொண்டு விளங்குகிறது. இதனை விளக்க ஐயனாரிதனார் 361
எடுத்துக்காட்டுப் பாடல்களைப் படைத்துள்ளார்.
v இந்த
எடுத்துக்காட்டுகள் வெண்பா யாப்பிலும் மருட்பா யாப்பிலும் இயற்றப் பெற்றுள்ளன.
1 |
வெட்சித்திணை |
வெட்சிப்பூச் சூடிய மறவர்கள் பகை நாட்டில் உள்ள பசுக்கூட்டத்தைக்
கவர்ந்து வருதல். |
2 |
கரந்தைத்திணை |
கரந்தைப் பூச்சூடி மாற்றார்
கவர்ந்து சென்ற பசுக்களை மீட்கச் செல்வது. |
3 |
வஞ்சித்திணை |
வஞ்சிப்பூச் சூடி மாற்றான்
மண்ணைக் கைப்பற்றக் கருதி படையெடுத்துச் செல்லுதல் |
4 |
காஞ்சித்திணை |
காஞ்சிப்பூச்சூடிய வீரர்கள்
மாற்றார் படையெடுத்து வருவதை அறிந்து வரவிடாமல் எல்லையில் நின்று தடுத்தல். |
5 |
நொச்சித்திணை |
மதிலைப் பகையரசன் கைப்பற்றாதவாறு
நொச்சிப்பூச் சூடி போரிடுதல் |
6 |
உழிஞைத்திணை |
பகைநாட்டின் காவற்காட்டையும்
அகழியையும் அழித்துக் கோட்டையைக் கைப்பற்ற மறவர்கள் உழிஞைப்பூச் சூடி போரிடுதல். |
7 |
தும்பைத்திணை |
தும்பைப் பூச் சூடி பகையரசர்
இருவர் எதிரெதிராக நின்று போர்க் களத்தில் கடுமையாகப் போரிடுவது. |
8 |
வாகைத்திணை |
போரில் பகைவரை வென்று ஒருவர்
வெற்றி பெற்று அதற்கு அடையாளமாக வாகைப் பூச்சூடுதல். |
9 |
பாடாண்திணை |
புகழ், வலிமை,
கொடைத்தன்மை, இரக்க உணர்வு ஆகியவற்றில் சிறந்து
விளங்கும் ஓர் ஆண்மகனுடைய ஒழுக்கத்தைப் போற்றிப் பாடுவது. |
10 |
பொதுவியல் திணை |
வெட்சி முதல் பாடாண் ஈறாகச்
சொல்லப்பட்ட திணைகளுக்குப் பொதுவானவற்றையும் கூறாது விடப்பட்டவற்றையும் விளக்குவது. |
11 |
கைக்கிளைத்திணை |
இது ஒருதலைக் காமம் எனப்படும்.
இது ஆண்பாற்கூற்று, பெண்பாற்கூற்று என பகுதிகளை உடையது. |
12 |
பெருந்திணை |
பொருந்தாக் காமம் – இது ஆண்பாற்
கூற்று, இருபாற் பெருந்திணை என இரண்டாகப் பாகுபடுத்தி விளக்கப்படும். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக