ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

மின்னகராதிகள்

மின்னகராதிகள்




சொற்களுக்குப் பொருள் தேடும் அகராதிகள் பல இணையவழியே உருவாக்கப்பட்டுள்ளன அவற்றிற்கு மின்னகராதிகள்(e-Dictionaries) என்று பெயர். அச்சு அகராதியில் ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருளை தேடிக் கண்டுபிடித்து அறிந்துகொள்வதை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் சொற்களை உள்ளீடு செய்து பொருளை அறிந்துகொள்ள இவை பெரிதும் பயன்படுகின்றன.

இணையவழி இவ்வகை மின்னகராதிகள் உருவாக்கப்பட்டுள்ளதால்,  அச்சு வடிவில் பல தொகுதிகளாகவும், பக்க எண்ணிக்கையில் அதிகமாகவும் காணப்படும் பல்வேறு அகராதிகளை செல்லும் இடங்களில் எல்லாம் கொண்டு சென்று பயன்கொள்ளமுடியாத நிலை மாறி, நினைத்தவுடன்  எங்குவேண்டுமானாலும் உடனுக்குடன் சொற்களின் பொருளைத் தேடி அறிந்துகொள்வது மிகவும் எளிதாக உள்ளது.

கணினியைவிட திறன்பேசிகள் அதிக அளவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட சூழலில் தற்போது மின்னகராதிகளின் பயன்பாடு முன்பைவிட மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திறன் பேசிகளில் அகராதிக்கென்று தனியே பல குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டு அவையும் வெகு மக்களால்  பயன்படுத்தப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

இத்தகைய அகராதிகள் தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் – தமிழ், கலைச்சொல் அகராதி, ஆட்சிச்சொல் அகராதி, மயங்கொலிச்சொல் அகராதி, வட்டார வழக்கு அகராதி எனப் பலவகையாக இணையத்தில் காணப்படுகின்றன.

பல்வேறு காலங்களில் அச்சு வடிவில் வெளிவந்த அகராதிகள் பல அப்படியே ஸ்கேன் செய்யப்பட்டு pdf கோப்பாக மாற்றப்பட்டு பயன்படுத்தும் வகையிலும் இணையத்தில் அகராதிகளின் பயன்பாடு புழக்கத்தில் இருந்து வருகிறது.

தெற்காசிய மின்னூலகம்(Digital Dictionaries of South Asia) https://dsal.uchicago.edu/dictionaries என்ற இணைய தளத்தில் தற்காசிய மொழிகள் பலவற்றிற்கும் வெளிவந்துள்ள அகராதிகளை மின்மயமாக்கி தேடல் வசதியுடன் கொடுத்துள்ளது.

 

இணையத்தில் காணப்படும் பல்வேறு மின்னகராதிகளை பின்வரும் இணைப்புகளைச் சொடுக்கி நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

https://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil

https://www.tamilvu.org/library/technical_glossary/html/techindex.htm

http://dictionary.tamilcube.com/

https://www.tamildict.com/english.php

https://www.kapruka.com/dictionary/EnglishToSinhala.jsp?query=god

https://www.valaitamil.com/electronicdictionary-tamil-dictionary199193.html

https://agarathi.com/

https://www.tamilvu.org/ta/library-dicContnt-115053

https://tamilnation.org/books/dictionaries/

https://thanithamizhakarathikalanjiyam.github.io/searche?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF

கருத்துகள் இல்லை: