விசைப் பலகைகள்
கணினியிலும் இணையத்திலும் தமிழைத் தட்டச்சு செய்ய பல்வேறு மென்பொருட்கள்
வெளிவந்துள்ளன. இவை ASCII, TAM(Tamil
Monolingual), TAB(Tamil Bilingual), Unicode(Universal
Code), TACE(Tamil All Character Encoding) போன்ற பல்வேறு
குறியேற்றங்களில் தட்டச்சு செய்யக் கீழ்க்காணும் மென்பொருட்கள் பயன்படுகின்றன.
அழகி
வானவில்
இண்டோவோர்டு
இளங்கோ
ஶ்ரீலிபி
கீமேன்
எ-கலப்பை
கம்பன்
கணியன்
குறள்
மென்தமிழ்
பொன்மடல்
இண்டிக் விசைப்பலகை
தமிழ்நாடு அரசு விசைப் பலகை
கீழடி
மேற்கண்ட
தட்டச்சு மென்பொருட்களில்(Tamil Typing Softwares) சில இலவசமாகக் கிடைக்கின்றன.
அவற்றுள் NHM Writer என்ற தட்டச்சு
மென்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்குறித்த மென்பொருட்களை
இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து அல்லது விலைகொடுத்து வாங்கி கணினிப்பொறியில் நிறுவி
பயன்படுத்தலாம்.
தற்போது தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு
வழங்கும் இலவச மடிக்கணினித் திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் மடிக்கணினிகளில்
இருப்பியல்பாக(Defaults) தமிழ்99 விசைப்பலகை
விண்டோஸ் இயங்குதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விசைப் பலகைகளின் மீதும் தமிழ்
எழுத்துக்கள் அச்சிடப்பட்டுள்ளன.
தற்போது பதிப்புலகில் நூலாக்கப்
பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறு மென்பொருட்களிலும் யுனிகோடு ஒத்திசைவு வழங்கப்பட்டு
வெளிவருகின்றன.
தட்டச்சுசெய்யும் முறைகள்
கணினி அல்லது இணையத்தில் தமிழைத் தட்டச்சு செய்வதற்கு பல மென்பொருள்கள் இருந்தாலும்
அவற்றைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யும் முறைகள்(Typing
Method) வெவ்வேறாகக் காணப்படுகின்றன. அதாவது எந்த எழுத்தை அழுத்தினால்
எந்த எழுத்து வரும் என்பதில் விசைப்பலகைக்கு ஏற்ப வேறுபாடுகள் காணப்படுகின்றன. அந்த
அடிப்படையில் பின்வருமாறு பல்வேறு விசைப்பலகை முறைகள் தட்டச்சு செய்ய அவரவர் பயிற்சிக்கு
ஏற்ப பயன்படுத்துகின்றனர்.
தமிழ் ஒலிபெயர்ப்பு
முறை
பழைய தட்டச்சு
முறை
புதிய தட்டச்சு
முறை
பாமினி
மாடுலர்
இன்ஸ்கிரிப்ட்
தமிழ்99
Phonetic Key Board |
Tamil 99 Key Board |
Bamini Unicode Key Board |
மேற்குறிப்பிடவாறு பல்வேறு விசைப்பலகை முறைகளில் தட்டச்சு செய்வதை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு 1999 ஆம் ஆண்டு தமிழ்99 என்ற விசைப்பலகை முறையினை பரிந்துரைத்து அங்கீகாரம் செய்தது. ஆனாலும் இன்னும் போதுமான விழிப்புணர்வும் ஒத்திசைவும் இல்லாத காரணத்தால் இன்றும் பல்வேறு விசைப்பலகை முறைகளையும் ஒருங்குறி அல்லாத எழுத்துருக்களையும் பயன்படுத்தும் நிலையே நீடிக்கிறது.
விண்டோஸ் இயங்குதளத்தில் தமிழ்99 தட்டச்சு முறையில் தட்டச்சு செய்ய பல்வேறு மென்பொருட்கள் இருந்தாலும் அவற்றும் இலவசமாகக் கிடைக்கும் NHM Writer என்ற மென்பொருள் பயன்படுத்த மிக எளிதாக உள்ளது. தற்போது தமிழ் இணையக் கல்விக் கழகம் “கீழடி” என்ற விசைப்பலகைக்கான மென்பொருளை வெளியிட்டுள்ளது.
தமிழ் 99 விசைப்பலகைகள்
2000 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் 99 தட்டச்சு முறையைக்கொண்ட விசைப் பலகைகளை TVS Gold Keyboard, HCL Tamil Keyboard, Sangapalagai Keyboard என்ற பெயரில் சில நிறுவனங்கள் வெளியிட்டன.
தற்போது தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மடிகணினிகளில் தமிழ்99 விசைப்பலகை முறைக்குரிய எழுத்துக்கள் விசைப்பலகைப் பொத்தான்களில் அச்சிடப்பட்டு மாணவர்களு வழங்கப்பட்டுள்ளன.
இவை தவிர மிதவை விசைப்பலகை எனப்படும் Floating Keyboard களும், இணையவழி உள்ளீடு செய்ய கூகுள் உள்ளீட்டுக்கருவிகளும்(Google Input Tools) பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக