ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

மின்னூலகம்

மின்னூலகம்

எண்ணிம வடிவில் நூல்களைச் சேகரிக்து நேரடியாக இணையத்திலோ அல்லது தரவிறக்கம் செய்து கணினியிலோ பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டவை மின்னூலகங்களாகும். இவை நேரடியாக நூலகத்திற்குச் சென்று நூல்களைத் தேடிப் படிப்பதற்கு ஆகும் நேரத்தைவிட மிகக்குறைந்த நேரத்தில் நூல்களைத்தேடிப் படிக்க வகை செய்கின்றன. வகைப்படுத்தப்பட்டு தேடுதல் வசதியோடு இருப்பதால் இவற்றைப் பயன்படுத்துவது மிக எளிதாகிறது. மேலும் அச்சில் கிடைக்காத அரிய புத்தகங்களும், இதழ்களும், ஓலைச் சுவடிகளும் இத்தகைய மின்னூலகங்களில் மட்டுமே கிடைப்பது இந் நூலகங்களின் தனிச்சிறப்பாகும்.

இணையத்தின் வழியாக அரசும், பல தன்னார்வ அமைப்புகளும், வணிக அமைப்புகளும் இத்தகைய மின்னூலகச் சேவையை வழங்கி வருகின்றன.

இத்தகைய மின்னூலகங்களை ஆங்கிலத்தில் e-Library, Digital Library, Online e-Library என்ற பெயர்களால் குறிப்பிடுகின்றனர்.


சில குறிப்பிடத்தகுந்த மின்னூலகங்கள்

https://www.tamildigitallibrary.in

https://tamilebooks.org

https://archive.org

https://noolaham.org

https://www.projectmadurai.org

https://ndl.iitkgp.ac.in

https://www.ulakaththamizh.in

https://www.tamilnovelspdf.com

http://padippakam.com

http://www.thamizham.net

http://www.tamilheritage.org


கருத்துகள் இல்லை: