பட்டினத்தார்
காடே
திரிந்து என்ன காற்றே புசித்து தென்ன கந்தை சுற்றி
ஓடே
எடுத்து என்ன உள்ளன்பு இலாதவர் ஓங்கு விண்ணோர்
நாடே
இடைமருதீசர்க்கு மெய் அன்பர் நாரியர் பால்
வீடே
இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டு இன்பம் மேவும் வரை (1)
தாயும்
பகை கொண்ட பெண்டிர் பெரும் பகை தன்னுடைய
சேயும்
பகை உறவோரும் பகை இச் செகமும் பகை
ஆயும்
பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில் இங்கு ஆதலினால்
தோயும்
நெஞ்சே மருதீசர் பொன் பாதஞ் சுதந்தரமே (2)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக