திருவாசகம்
சிவபுராணம்
நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள்
வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள்
வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான்
தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி
வாழ்க! (1)
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன்
அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன்
பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம்
கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன்
கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும்
சீரோன் கழல் வெல்க! (2)
-
மாணிக்கவாசகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக