திருமந்திரம்
முதல் தந்திரம்
அன்பு சிவம் இரண்டு என்பர்
அறிவு இலார்
அன்பே சிவம் ஆவது ஆரும்
அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும்
அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து
இருந்தாரே.
பொன்னைக் கடந்து இலங்கும்
புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்
பிறை
துன்னிக் கிடந்த சுடு பொடி
ஆடிக்குப்
பின்னிக் கிடந்தது என் பேர்
அன்பு தானே.
என் அன்பு உருக்கி இறைவனை
ஏத்துமின்
முன் அன்பு உருக்கி முதல்வனை
நாடுமின்
பின் அன்பு உருக்கி பெரும் தகை
நந்தியும்
தன் அன்பு எனக்கே தலை நின்ற
வாறே.
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன்
அறியும்
உகந்து அருள் செய்திடும் உத்தம
நாதன்
கொழுந்து அன்பு செய்து அருள்
கூரவல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள்
அதுவாமே.
கண்டேன் கமழ் தரு கொன்றையினான்
அடி
கண்டேன் கரி உரியான் தன் கழல்
இணை
கண்டேன் கமல மலர் உறைவான் அடி
கண்டேன் கழல் அது என் அன்பினுள்
யானே
– திருமூலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக