ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று - குறுந்தொகை

குறுந்தொகை

குறிஞ்சி

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.


துறை              :தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி,தோழி இயற்                              பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.

பாடியவர்       : தேவகுலத்தார்

கருத்துகள் இல்லை: