திங்கள், 4 செப்டம்பர், 2023

நாமார்க்குங் குடியல்லோம் - திருநாவுக்கரசர்

                      தேவாரம் – திருநாவுக்கரசர்

 

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

            நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

            இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

            சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

            கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

கருத்துகள் இல்லை: