ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

மின் நூல்கள்

மின் நூல்கள்

மின்னூல் என்பது நூல் ஒன்றினுடைய மின்னணுவியல் அல்லது எண்முறை பதிப்பாகும். மின்வடிவில் உள்ள நூல்கள் அனைத்தையும் மின்னூல்கள் எனப் பொதுவாக அழைத்தாலும் அவை உருவாக்கப்படும் கோப்பு வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

கையாவண நூல்(pdf Book)

புரட்டும் நூல்(Flip Book)

மென்னூல்(epub)

கிண்ணூல்(Mobi)

மீயுரை நூல்(HTML Book)

மேற்குறித்த மின்னூல்கள் அவை வடிவமைக்கப்பட்ட முறை, வாசிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கருவி, வாசிக்கும்போது ஏற்படுத்தும் அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு  வேறுபட்டு விளங்குகின்றன.

பொதுவாக புழக்கத்தில் இருக்கும் மின்னூலாக pdf வடிவ நூல்களே விளங்கிவருகின்றன. இவ்வடிவிலான நூல்களில் பெரும்பகுதி அச்சு நூல்களை ஸ்கேன் செய்து pdf வடிவில் உருவாக்கப்பட்டவையாகும்.

தற்காலத்தில் வெளியிடப்படும் நூல்கள் அச்சு வடிவம் மின்வடிவம் என இரண்டிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.

அச்சுச் செலவைத் தவிர்ப்பதற்காக பல நூல்கள் மின் வடிவில் மட்டும் வெளியிடப்படுகின்றன.

epub, mobi போன்ற வடிவில் வெளியிடப்படும் மின்னூல்கள் எழுத்து(Text), படம்(Picture) என்பதைத் தாண்டி நிகழ்படம்(Video), அசைவூட்டம்(Animation), ஒலி(Audio) முதலிய பல்லூடகங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை: