ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

வாழி ஆதன், வாழி அவினி - ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

மருதம்

வேட்கைப் பத்து

 

            'வாழி ஆதன், வாழி அவினி!

            நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!'

            என வேட்டோளே, யாயே: யாமே,

            'நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்

            யாணர் ஊரன் வாழ்க!

            பாணனும் வாழ்க!' என வேட்டேமே.


             பாடிய புலவர் : ஓரம்போகியார்.

 

துறை                : புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, 'இது தகாது'எனத் தெளிந்த          மனத்தனாய்மீண்டு தலைவியோடு கூடி ஒழுகாநின்ற                       தலைமகன்தோழியோடு சொல்லாடி, 'யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது.

கருத்துகள் இல்லை: