தண்டியலங்காரம்
தொல்காப்பியத்தை
அடுத்து அணி இலக்கணம் பயிலப் பெரிதும் துணை நிற்பது தண்டியலங்காரம்.
இந்நூல் தொல்காப்பியத்தையும், வடமொழி காவியா தரிசத்தையும் அடியொற்றி எழுதப்பட்டது.
இந்நூல், பொதுவணியியல், பொருள்அணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகளை உடையது.
நூலாசிரியரான தண்டி,
அணி வகைகள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டு வெண்பாக்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமொழியில் ‘காவியாதரிசம்’ என்ற அணி இலக்கண நூலை இயற்றியவர்
தண்டி என்பவராவார்.
தமிழிலுள்ள தண்டியலங்காரம்
என்ற அணி இலக்கண நூலின் ஆசிரியர் பெயரும்
தண்டி என்றே குறிப்பிடப்படுவது இங்கு கவனிக்கத்தக்கது. தண்டியலங்காரச் சிறப்புப்பாயிரம், இவரைக் கவிச் சக்கரவர்த்தி கம்பரின் பெயரன்; அம்பிகாபதியின் மகன் எனக் குறிப்பிடுகின்றது.
இந்நூலின் காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக