புதன், 6 செப்டம்பர், 2023

யாப்பருங்கலக்காரிகை

யாப்பருங்கலக்காரிகை

 

 

v தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று யாப்பருங்கலக்காரிகை.

 

v இந்நூலின் ஆசிரியர் அமிதசாகரர். உரையாசிரியர் குணசாகரர்.

 

v காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு.

 

v இந்நூல் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் இயற்றப்பட்டுள்ளது.

 

v காரிகை என்னும் சொல்லுக்கு கட்டளைக் கலித்துறை என்றும் ஒரு பொருள் உண்டு. அதன் அடிப்படையில் இந்நூலுக்கு யாப்பருங்கலக்காரிகை என்ற பெயர் அமைந்தது.

 

v இந்நூல் செய்யுட்கள் பெண்ணை முன்னிலையாக்கிப் பேசும் வகையில் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளன.

 

v யாப்பருங்கலக்காரிகை உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்ற மூன்று இயல்களைக் கொண்டு விளங்குகிறது. 

v முதல் இயலான உறுப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய செய்யுள் உறுப்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

v இரண்டாம் இயலான செய்யுளியலில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் மருட்பாஆகிய பாக்களுக்குரிய இலக்கணம் பேசப் பெற்றுள்ளது. நான்கு வகைப் பாக்களுக்குரிய பாவினங்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

v முன் இரு இயல்களில் கூறப்பட்ட செய்திகளுக்கு வேறுபட்டு வருவதாகவும்,  முன்னர்க் கூறப்பட்டவற்றிற்கு விளக்கம் தருவதாகவும் மேலும் கூறாமல் விடப்பட்ட செய்திகளை எடுத்துரைப்பதாகவும் வருவன  மூன்றாம் இயலான ஒழிபியலில் விளக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: