மின்னிதழ்
மின்னிதழ்(online
magazine) என்பது
இணையத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வலைத்தளம் ஒன்றில் பதிவேற்றப்பட்ட கோப்பு
வடிவத்திலோ(pdf or Flip Book) அல்லது வலைப்பக்க வடிவிலோ வெளிவரும் இதழாகும்.
இவ்விதழ்களை,
1. அச்சு வடிவில் வெளிவரும்
இதழ்கள் இணையத்திலும் வெளிவருது.
2. அச்சடிக்கப்பட்ட இதழாக இல்லாமல் இணையத்தில் மட்டும்
வெளிவரும் இதழ்.
உலகெங்கிலும்
உள்ள புலம்பெயர்த் தமிழர்கள் இவ்வகையான மின்னிதழ்களை மிகுதியான அளவில் வெளியிட்டு வருகின்றனர்.
இத்தகைய
இணைய இதழ்களும் நாள், வாரம், மாதமிருமுறை, மாதம், காலாண்டு, அரையாண்டு என கால அடிப்படையில்
வெளியிடப்பட்டு வருகின்றன.
அச்சிலும்
இணையத்திலும் வெளிவரும் இதழ்களுக்கு உதாரணமாக, தினமணி, தின மலர், தினத்தந்தி, விகடன்,
நக்கீரன், அமுதசுரபி, புதியபார்வை, புதியதலைமுறை என்பனபோன்றவற்றைக் கூறலாம்.
இணையத்தில்
மட்டும் வெளிவரும் இதழ்களுக்கு உதாரணமாக, உயிரோசை, சொல்வனம், பதிவுகள், வல்லினம், பெயல்,
வல்லமை, திண்ணை, இலக்கு, வரலாறு.காம் என்பன போன்றவற்றைக் கூறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக