சனி, 9 செப்டம்பர், 2023

ஒலிநூல்/ பேசும் புத்தகம் (Audio Book)

ஒலிநூல்/ பேசும் புத்தகம் (Audio Book)

நூல்களைப் படித்து அவற்றை ஒலிவடிவில் சேமித்து உருவாக்கப்படும் ஒலிப்பதிவுத் தொகுப்புக்கு ஒலிநூல்(Audio Book) அல்லது பேசும் புத்தகம்(Talking Book) என்று பெயர்.

கண்பார்வைக் குறைபாடுடையவர்களும், வயதானர்களும் கேட்டுப் பயன் பெறும் வகையில் அச்சில் வெளிவரும் நூல்கள் ஒலி நூல்களாகவும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இவை,  

1.       ஒலிவடிவம் மட்டும்

2.       வரிவடிவம்+ஒலிவடிவம்

 

என்ற இரண்டு நிலைகளி்ல் வெளியிடப்பட்டு வருகின்றன.

தற்போது தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களுக்கு ஒலி நூல்களை உருவாக்கியுள்ளனர்.

அதைப்போலவே பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், ஜெயகாந்தன் சிறுகதைகள், புதுமைப்பித்தன் சிறுகதைகள், உ.வே.சா. வின் என் சரித்திரம் போன்ற பிற்கால நூல்களும் ஒலிநூல்களாக வெளிவந்துள்ளன.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது வெளியிடப்படும் நூல்கள், அச்சுவடிவம், மின்னூல் வடிவம், ஒலி வடிவம் என்ற மூன்று நிலைகளிலும் வெளியிடப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

www.tamilaudiobooks.com

https://kadhaiosai.com/

https://www.storytel.com/

https://kukufm.com/

போன்ற பல்வேறு இணைய தளங்களில் இத்தகைய ஒலிப் புத்தகங்கள் இலவசமாகவும் பணம் செலுத்தி வாங்கும் நிலையிலும், குறுவட்டுக்களாகவும்  ஏராளமாகக் கிடைக்கின்றன.  

கருத்துகள் இல்லை: