நன்னூல்
v எழுத்திலக்கணம் பற்றியும் சொல்லிலக்கணம் பற்றியும் கூறும் இந்நூல் எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம் என இரண்டாகப் பகுத்து விளக்கப்பட்டுள்ளது.
v பாயிரம் (55 நூற்பாக்கள்),
எழுத்ததிகாரம் (202 நூற்பாக்கள்), சொல்லதிகாரம் (205 நூற்பாக்கள்) என மூன்று பகுதிகளை
கொண்டுள்ள நன்னூலில் 462 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
v எழுத்ததிகாரம் எழுத்தியல்,
பதவியல், உயிரீற்றுப் புணரியல்,மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என ஐந்து இயல்களாகப்
பகுக்கப்பட்டுள்ளது. இதில் 202 சூத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
v சொல்லதிகாரம் பெயரியல்,
வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல்
என ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதில் 205 சூத்திரங்கள்
இடம்பெற்றுள்ளன.
v சீயகங்கன்
என்ற அரசனின் வேண்டுகோளின்படி நன்னூல் இயற்றப்பட்டதாகப் பாயிரம் குறிப்பிடுகிறது.
v இயற்றியவர்
பவணந்திமுனிவர். சமண சமயத்தவர்.
v காலம் கி.பி.
13 ம் நூற்றாண்டு.
v மயிலைநாதர்,
சங்கர நமச்சிவாயர், கூழங்கைத் தம்பிரான், விசாகப்பெருமாளையர், இராமானுச கவிராயர், ஆறுமுக நாவலர் முதலிய பலர் நன்னூலுக்கு உரை எழுதியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக