ஹைக்கூ
நகரும் நதி நீரில்
நகராமல் உறங்குகிறது
நிலா நிழல்.
- அப்துல்ரகுமான்
புல்லைப் பிடுங்க போனேன்
திகைத்தேன்
ஒளிவீசும் பனித்துளி
- அமுதபாரதி
நடுப்பகல்
சுடுமணல்
பாவம்... என் சுவடுகள்.
- அறிவுமதி
பயம்
ஊர்ந்து கொண்டேயிருக்கிறது –
இது
பாமபு போன தடம்.
- ஈரோடு தமிழன்பன்
அணில்களே
நகங்களை வெட்டுங்கள்
பூவின் முகத்தில் காயங்கள்.
- மித்ரா
திண்ணையிலிருந்து
நிலவை ரசிப்போம்
தொலைந்தது வீட்டுச்சாவி.
- ராஜமுருகுபாண்டியன்
அறுவடை முடிந்ததும்
வீடு திரும்பவில்லை
வயற்காட்டுப் பொம்மை.
-
ஸ்ரீரங்கராஜபுரம் துளசி
அய்யனார் கை அரிவாள் மீது
சிட்டுக் குருவியொன்று
இயல்பாக அமர்கிறது.
- மணி சண்முகம்
செருப்பில் ஏறிப் பார்த்து
காலுக்குப் பொருந்தாமல்
இறங்கிச் செல்கிறது
எறும்பு.
- என்.லிங்குசாமி
விண்மீன்கள் ரசித்தபடியே
உறங்கும் குழந்தைகள்
பழுதடைந்த தொலைக்காட்சி
- பாரதி ஜிப்ரான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக